7 - அறிவியல் - மின்னோட்டவியல் - மதிப்பீடு - வினா - விடைகள்
மின்னோட்டவியல்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘ x’ எனக்குறிப்பிடப்பட்டுள்ள புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
அ) 10 ஆம்பியர்
ஆ) 1 ஆம்பியர்
இ) 10 வோல்ட்
ஈ) 1 வோல்ட்
விடை: அ) 10ஆம்பியர்
2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?
அ) சாவி L மட்டும்
ஆ) சாவி M மட்டும்
இ) சாவிகள் M மற்றும் N மட்டும்
ஈ) சாவி L அல்லது M மற்றும் N
விடை: ஈ) சாவி L அல்லது M மற்றும் N
3. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்ப டுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
அ) 2.5 mA
ஆ) 25 mA
இ) 250 mA
ஈ) 2500 mA
விடை: இ) 250 mAவ
4.கீழ்க்காணும் எந்த மின்சுற்றில்,மின்விளக்குகள் தொடரிணைப்பில்
இணைக்கப்பட்டுள்ளது?
விடை: ஆ)
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு _________ அமையும்.
விடை: எதிர் திசையில்
2. ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய ________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
விடை: 6.248 X1018
3. மின்னோட்டத்தை அளக்க ___________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
விடை:அம்மீட்டர்
4. மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ____________ பிணைக்கப்பட்டிருக்கும்.
விடை: தளர்வாக
5. மின்கடத்துத்திறனின் S.I. அலகு ______ ஆகும்.
விடை: சீமென்ஸ் / மீட்டர் (s/m)
III. சரியா – தவறா எனக் குறிப்பிடு. தவறு எனில் சரியான விடையை எழுதுக
1. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.
விடை: தவறு.
மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரான் பாயும் திசைக்கு எதிர் திசையில் அமையும்.
2. வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.
விடை: தவறு.
வீடுகளில் உள்ள மின் இணைப்பில் அதிக பளு ஏற்படும்போது உருகி இழையானது மின் உருகு இழை உருகிவிடும்.
3. பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப்படுகின்றன
விடை: சரி
4. மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறாம்.
விடை: தவறு.
மின்னோட்டத்தினை ‘I’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறாம்.
5. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
விடை: சரி
IV. பொருத்துக
விடை:
V. ஒப்புமைப்படுத்துக
1. நீர்: குழாய் : மின்னூட்டம் : __________
விடை: கம்பி
2. தாமிரம் : கடத்தி : மரக்கட்டை: _________
விடை: கடத்தாப் பொருள்
3. நீளம் : மீட்டர் அளவு கோல் : மின்னோட்டம் : _______
விடை: அம்மீட்டர்
4. மில்லி ஆம்பியர் : 10-3 :மைக்ரோ ஆம்பியர்: ______.
விடை: 10-6A
VI. கூற்று – காரணம்
1. கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R): தாமிரம் குறைந்தமின்தடையைக் கொண்டுள்ளது
தெரிவு:
அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி
விடை: அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
2. கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை
காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சர
விடை: அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
VII. குறு வினாக்கள்
1. மின்னோட்டத்தின் வேகம் என்ன?
மின்னோட்டத்தின் வேகம் ஒளியின் வேகத்தில் 1/100 பங்கு வேகத்தில் பயணிக்கிறது.
2. மின்கடத்துத்திறனின் S.I. அலகு என்ன?
மின்கடத்துத்திறனின் S.I. அலகு சீமென்ஸ் / மீட்டர் (s/m) ஆகும்.
3. மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனம் மின்கலம் ஆகும்.
4. மின் உருகி என்பது என்ன?
மின் உருகியானது பெரும்பாலான மின்சாதனங்களிலும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும்.உருகி இழையானது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.
5. மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.
மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன் ஆகியவை மின்னோட்டத்தின் வெப்பவிளைவினை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை ஆகும்.
6. அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.
இரப்பர், கண்ணாடி, பிளாஸ்டிக், பீங்கான், மரக்கட்டை போன்றவற்றை அரிதிற்கடத்திகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.
7. மின்கலம் என்பது என்ன?
மிகச்சிறிய அளவிலான மின்னோட்டத்தை மிகக் குறைந்த காலத்திற்கு உருவோக்கும் மூலங்கள் மின்கலம் என அழைக்கப்படுகின்றன, மினகலன்கள் வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றுபவையாகும்.
VIII. சிறு வினாக்கள்
1. மின்னோட்டம் வரையறு.
மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். மின்னோட்டத்தின் S.I. அலகு ஆம்பியர் ஆகும்.
2.பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு – வேறுபடுத்துக
3. மின் கடத்துத்திறனை வரையறு.
‘கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத் தியின் மின்கடத்துத்திறன்’ அல்லது தன் மின் கடத்துத்திறன் எனப்படும்.
இது பொதுவாக σ (சிக்மா) என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. மின்கடத்துத்திறனின் அலகு சீமென்ஸ் / மீட்டர் (s/m) ஆகும்.
IX. நெடு வினா
1. தொலைபேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக.
தொலைபேசிகளில், மாறும் காந்த விளைவானது ஒரு மெல்லிய உலோகத்தாளை (டையபார்ம்) அதிர்வுக்கு உட்படுத்துகிறது. டையபார்ம்களாளது காந்தங்களால் ஈர்க்கக்கூடிய ஒரு உலோகத்தால் செய்யப்படுகின்றன.
1. தொலைபேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச்சுருளுடன் டயாபர்ம் இணைக்கப்பட்டிருக்கும்.
2. கம்பிகளின் வழியே மின்னோட்டம் பாயும்போது மென்மையான இரும்புப் பட்டையானது ஓர் மின்காந்தமாக மாற்றம் அடைகிறது.
3. டையபார்மானது மின் காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது.
4. மறு முனையில் உள்ள நபர் பேசும் போது பேசுபவரின் குரலானது மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்றமுறச் செய்கின்றது, இந்த மாற்றம் கேட்பானில் உள்ள டையபார்மை அதிர்வுறச் செய்து ஒலியை உண்டாக்குகிறது.
2. மின்னோட்டத்தின் வெப்பவிளைவைப் பற்றி விளக்குக.
மின்னோட்டத்தின் விளைவினால் வெப்பம் உருவாக்கப்படும் நிகழ்வே மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எனப்படும்.
ஓர் கம்பியின் வழியே மின்னோட்டம் பாயும்போது மின்னாற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது, வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டது ஆகும். நிக்ரோம் அவ்வகையான பொருளுக்கு எடுத்துக்காட்டாகும். (நிக்கல், இரும்பு மற்றும் குரோமியம் சேர்ந்த கலவை) மின்னோட்டத்தின் வெப்ப விளைவானது பல்வேறு செய்முறைப் பயன்பாடுகளை கொண்டதாகும். மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன் ஆகியவை இவ்வகையான விளைவினை அடிப்படையாகக் கொண்டவை. இச்சாதனங்களில் அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டிருக்கும்.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகள்
-பாயும் மின்னோட்டத்தின் அளவு
-மின்தடை
-மின்னோட்டம் செலுத்தப்படும் நேரம்
3. உலர் மின்கலம் ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக
உலர் மின்கலம் ஆனது பெரும்பாலான மின் சாதனங்களில் பொதுவாகப் பயன்படும் வேதி மின்கலன்களின் ஓர் சாதாரண வகையாகும். இது சிறிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லத்தக்க ஓர் மின் மூலமாகும்.
உலர்மின்கலமானது இயற்கையில் உலர்ந்த நிலையில் காணப்படாது. ஆனால் அவற்றில் உள்ள மின்பகு திரவத்தின் தன்மையானது பசைபோல் உள்ளதால் நீர்மத்தின் அளவு மிகக் குறைந்து காணப்படும் மற்ற மின்கலன்களில் மின்பகு திரவங்களானது பொதுவாக கரைசல்களாகக் காணப்படும்.
உலர் மின்கலங்கள், தொலைக்காட்சியின் தொலைவியக்கி, டார்ச், புகைப்படக் கருவி மற்றும் விளையாட்டுப் பொம்மைகளில் பொதுவாகப் பயன்படுபவைகள் ஆகும்.
உலர் மின்கலங்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஊர் எளிய வடிவம் ஆகும். இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்த நாக மின்தகட்டை உள்ளடக்கியது.
அம்மோனியம் குளோரைடு மின் பகுளியாகச் செயல்படுகிறது.
துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்கப் பயன்படுகிறது.
கலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும். கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர்மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.
இது ஒரு மெல்லிய பையில் மிக நெருக்கமாக மரக்கரி மற்றும் மாங்கனீசு டை ஆக்சைடு நிரம்பிய கலவியால் சூழப்பட்டிருக்கும். இந்த MnO2 ஆனது மின் முனைவாக்கியாகச் செயல்படுகிறது. துத்தநாகப் பாண்டமானது மேலே மூடப்பட்ட நிலையில், வேதிவினையில் விளைவாக உருவாகும் வாயுக்களை வெளியேற்ற ஏதுவாக அதில் ஊர் சிறிய துளையானது இடப்பட்டு இரசாயன நடவடிக்கைகளை அனுமதிக்க ஒரு சிறிய துளை உள்ளது. கலத்திற்குள்ளே வேதி வினையானது லெக்லாஞ்சி மின்கலம் போன்றே நடைபெறும்.
X. உயர் சிந்தனை வினா
1. மாணவர் ஒருவர், ஒரு மின்கலம், ஒரு சாவி, ஒரு டார்ச் பல்பு ( கை மின் விளக்கு பிடிப்பானுடன்) மற்றும் தாமிர இணைப்புக் கம்பிகளைக் கொண்டு ஒரு மின்சுற்றை உருவாக்குகிறார். அவர், சாவியைக் கொண்டு சுற்றை மூடிய போது, மின்விளக்கு ஒளிர வில்லை. அவர், மின்சுற்றை சோதிக்கும் போது, அனைத்து இணைப்புகளும் சரியாக இருக்கிறது. எனில்,
• அனைத்து இணைப்புகளும் சரியாக இருந்த போதிலும், மின்விளக்கு ஒளிராமல் இருக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம்
மின் விளக்கு ஒளிராமல் இருப்பதற்கான காரணங்களாக கீழ்க்கண்டவை இருக்கலாம்.
-மின்கலனில் உள்ள ஆற்றல் குறைவாக இருக்கலாம், மின்சாரத்தை உருவாக்கப் போதுமான ஆற்றல் இல்லாமல் இருக்கலாம்.
-மின் விளக்கின் மின் உருகி பழுதாகி இருக்கலாம்
-இணைப்புகள் தளர்வாக இருக்கலாம்.
-இணைப்புக்கம்பிகளின் உள்ளே கம்பி துண்டிக்கப்பட்டு இருக்கலாம்